பிரபல பாடகி சீக்கிரமே அம்மாவாக போகிறாராம்... கணவருடன் போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"மெர்சலாயிட்டேன்" பாடல் மூலம் பிரபலம் அடைந்தவர் பாடகி நிதி மோகன். நிதி மோகன் தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.  அதிலும் முக்கியமாக நானும் நானும் ரவுடி தான் படத்தில் நீயும் நானும், தெறி படத்தில் இருந்து செல்லாக் குட்டி, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து 'காந்தக் கண்ணாழகி' போன்ற பாடல்களும் அடங்கும். மேலும் தமிழ் அல்லாது பிற மொழிகளிலும் பாடி வருகிறார். அவர் நிஹார் பாண்டியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினரின் இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு பாடகி நிதி மோகன் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாடகி நிதி மற்றும் நிஹார் பாண்டியா கடந்த 2019-ம் வருடம் பிப்ரவரி 15 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். கபில் சர்மா ஷோவின் ஒரு எபிசோடில் தங்கள் காதல் கதையைத் பகிர்ந்து கொண்ட போது, நிஹாவர் பாண்டியா கூறுகையில் "எனது  நண்பர் ஒரு இசைக்குழுவில் இருந்தார். நித்திக்கு அந்த இசைக்குழுவுடன் தொடர்பு இருந்தது. நான் எப்போதும் அந்த நண்பரிடம் நிதியை அறிமுகப்படுத்த கேட்டுக்கொண்டே இருப்பேன், ஆனால் அது நடக்கவில்லை. ஆச்சர்யமூட்டும் வகையில், கோவாவில் நடந்த அதே நண்பரின் திருமணத்தில், கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, நான் முறையாக நிதியை சந்தித்தேன். எங்கள் காதல் கதை தொடங்கியது." என்று கூறியிருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular singer shares happy news பாடகி சீக்கிரமே அம்மாவாக போகிறாராம்

People looking for online information on Neeti Mohan will find this news story useful.