''எனது தந்தை எனக்கு மகனாக பிறந்துள்ளளார்'' - உருகிய பிரபல பாடகர் - ரசிகர்கள் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பீதியில் இருக்கும் மக்களுக்கு அவ்வப்போது சில நல்ல விஷயங்களும் வெளியாகி மக்களை மகிழ்வித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரபல பாடகர் திவாகர் தனது ஃபேஷ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார். அந்த பதிவில், ''எனது தந்தை எனக்கு மகனாக பிறந்துள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான திவாகர், வடகறி படத்தில் நெஞ்சுக்குள்ள நீ,  சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வாரேன் வாரேன் உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

Tags : Diwakar

Popular singer blessed with baby boy ft Diwakar | ஆண் குழந்தைக்கு தந்தையான பிரபல பாடகர் திவாகர்

People looking for online information on Diwakar will find this news story useful.