"ஒரே ஒரு SHOULDER STEP".. அத்தனையும் தெறி ஹிட்..! ‘எங்கேயோ எப்போதோ’ பார்த்த மாதிரி இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1. டிசம்பர் 17-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Advertising
>
Advertising

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட  தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றியிருந்தது. இந்த படத்துக்கு மிகப்பெரிய Openings கொடுத்தவைகளுள் இந்த படத்தின் பாடல்களும் ஒன்று என்று சொல்லலாம்.

அதன்படி, புஷ்பா படத்தின் தமிழ் பதிப்பில் ஓ சொல்றியா (ஆண்ட்ரியா), சாமி சாமி (ராஜலட்சுமி செந்தில்கணேஷ்) மற்றும் ஓடு ஓடு ஆடு (பென்னி தயால்) உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடத்தில் ஹிட் அடித்துள்ளன. இதில் ஓடு ஓடு ஆடு என்கிற பாடலை தமிழில், பாடகர் பென்னி தயாலும், இதன் தெலுங்கு பதிப்பில் சிவம் என்கிற பாடகரும் இந்த பாடல்களை பாடியுள்ளனர்.

இதில் சிவம், தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தில், ‘வாழ்க்கை ஓடி ஓடி’ பாடலை பாடியவர். இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ளார். இந்த பாடலில் அல்லு அர்ஜூன் தன் தோள்களை குலுக்கி ஒரு ஸ்டெப் போட்டிருப்பார். இந்த Step-ஐ, இந்த பாடலின் பல்லவி வரிகள் அனுபல்லவி போல, ரிப்பீட் ஆகும்போதெல்லாம் அல்லு அர்ஜூனும் பின்னணி நடனக் கலைஞர்களும் ஆடுவர்.

இந்த வருடம் முழுவதும் தென்னிந்திய அளவிலும் உலக அளவிலும் பிரபலமான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் நடித்த, ‘வாத்தி கம்மிங்’ பாடலிலும் வேறொரு shoulder step இடம் பெற்றிருந்தது.

ஹிட் அடித்த இந்த பாடலின் இந்த Step-ஐயும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், இந்திய திரைப்பிரபலங்கள் என பலரும் நடித்து, இணையங்களில் வீடியோக்களை வெளியிட்டனர். இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருந்ததை, மேக்கிங் மற்றும் லிரிக் வீடியோக்களில் காண முடிந்திருக்கும்.

இதேபோல் நடிகர் தனுஷ் நடிப்பில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான  ‘ஜகமே தந்திரம்’ படத்தில், இடம் பெற்ற ‘ரகிட ரகிட’ பாடலில், தனுஷின் பிரபலமான shoulder step ஒன்று வைரலானது. தனுஷூடன் சேர்ந்து ஆடிய நடிகை சஞ்சனா நடராஜனின் நடனமும் இந்த பாடலில் இடம் பெற்றதுடன், ரசிகர்கள் பலரையும் ஆடவைத்தது என சொல்லலாம்.

இந்த பாடலில் இப்பாடலுக்கு நடனம் அமைத்த, நடன மாஸ்டர் பாபா பாஸ்கர் இடம் பெற்றிருப்பார்.

மேற்கண்ட இந்த ட்ரெண்டிங் பாடல்களிலும் உள்ள இந்த  shoulder step co-incidents-களை கடந்தால், இதற்கு முன்னால் வந்த ஒரு படத்திலும் இதேபோல் ஒரு shoulder step இடம் பெற்றிருந்ததை நினைவு கூற முடியும். அதுதான் இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் இடம் பெற்ற  ‘மாசமா.. ஆறு மாசமா’ பாடல்.

2011-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் குறிப்பிட்ட இந்த பாடலில், நடிகர் ஜெய், தன் காதல் 6 மாதம் கழித்து கைகூடிய சந்தோஷத்தில் சாலையில் போகிற-வருகிறபவர்களுடன் எல்லாம் கொண்டாட்டமாக நடனம் ஆடுவார். இயக்குநர் எம். சரவணன் எழுதிய இந்த பாடலுக்கு, தினா மாஸ்டர் நடனம் அமைத்திருப்பார். எளிமையான அதே சமயம் அனைவரையும் ஆடவைக்கும், டான்ஸ் ஸ்டெப்கள் அடங்கிய இந்த பாடலிலும் ஒரு பிரபலமான shoulder step இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Popular Shoulder Step rocks among south indian mass films

People looking for online information on Allu Arjun, Dhanush, Engeyum Eppothum, Jagame Thanthiram, Master, Master vathi coming, Pushpa The Rise, Vijay will find this news story useful.