பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திடீர் மறைவால் கலங்கும் குடும்பத்தினர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகையின் மகன் காலமாகியுள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். மெட்டி ஒலி, சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இவர் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது சாந்தி வில்லியம்ஸின் மகன் காலமாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் வசித்த வந்த இவரது மகன் சந்தோஷ் நேற்று இரவு காலமாகியுள்ளார். மாரடைப்பின் காரணமாக, தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திடீர் மறைவால் கலங்கும் குடும்பத்தினர். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சீரியல் நடிகையின் மகன் காலமானார் | Popular Serial Actress Shanthi williams son passed away

People looking for online information on Pandian stores, Santhosh, Shanthi Williams will find this news story useful.