பிரபல சீரியல் நடிகை காதலில் விழுந்தார்... காதலரின் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரண்டு பேர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது, அவர்களை எந்த விதத்திலும் பிரிக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே சினிமா உலகில் புதிய ஜோடி தாங்கள் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்வதை உலகத்திற்கு வெளிப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

பிரபல ராஜ் டிவி சீரியலான 'மண்வாசனை' சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை அவிகா கவுர். சிறு வயதிலேயே தனது அசாத்திய நடிப்பால் தமிழ் குடும்பங்களுக்குள் நுழைந்தவர். பலருக்கும் இவரது முகம் இன்னும் ஞாபகம் இருக்கும். மேலும் பல ஹிந்தி தொடர்களிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது பாதையை ஆரம்பித்த அவர், வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் முன்னாள் ரோடிஸ் நிகழ்ச்சி போட்டியாளரான மிலிந்த் சந்த்வானியை டேட்டிங் செய்து வருவதாக தற்போது அறிவித்துள்ளார். மேலும் தனது காதலர் பற்றி நீண்டதொரு பதிவையும் வெளியிட்டு, சில ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Avika Gor

தொடர்புடைய இணைப்புகள்

Popular serial actress introduced her lover to worldபிரபல சீரியல் நடிகை காதலில் விழுந்தார்

People looking for online information on Avika Gor will find this news story useful.