பிரபல விஜய் டிவி சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு... வாழ்த்தும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல்கள் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்வேதா வெங்கட் தற்பொழுது தாயாகி உள்ளார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கொடூர வில்லியாகவும்  குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்வேதா. விஜய் டிவியின் சின்ன தம்பி சீரியலிலும், தாமரை, பொன்மகள் வந்தாள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சீரியல்களிலும் மட்டுமில்லாமல் கவண், தப்புதாண்டா போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.



இவர் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த வருடம் தாய்மை அடைந்த நிலையில் நடிகை ஸ்வேதா வெங்கட்டுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் பொழுது "கடைசியாக என் கணவருடன் போட்ட பந்தயத்தில் நான் ஜெயித்து விட்டேன். ஆம் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்பது போல மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular serial actress gives birth to a baby பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு

People looking for online information on Swetha venkat will find this news story useful.