கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து பல பிரபலங்களும் தங்களது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இது திருமணம் சீசனா என்று சொல்லக்கூடிய அளவுக்கு அடுத்தடுத்த பல பிரபலங்களும் தங்கள் திருமணத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி மற்றும் கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் நடித்த நடிகர் ராகுலுக்கு ரவி தனது வாழ்க்கை துணை பற்றி அவர் அறிவித்துள்ளார்.
தனது வருங்கால மனைவியுடன் அழகான புகைப்படத்தை வெளியிட்ட அவர் இதுபற்றி கூறும்போது "அவளை முதன்முதலில் சந்தித்த போது இதுவும் ஒரு சாதாரண நாள் தான் என்று நினைத்தேன். பின்பு ஒவ்வொரு நாளும் அவளால் மெருகேறிக் கொண்டே வந்தது. இன்று எனக்கு ஸ்பெஷலான பெண்மணியாக மாறியிருக்கிறார். எனது நாட்களை மட்டுமல்ல எனது வாழ்க்கையும் அவளால் மெருகேறி உள்ளது. அவரது அசாத்திய புன்னகை மற்றும் பேச்சினை பார்க்கும் பொழுது இவள் என் வாழ்க்கையில் ஒரு சாதாரண பெண்ணல்ல, இவர்தான் என் வாழ்க்கையே என்று அறிந்துகொண்டேன். அந்த மிகப்பெரிய நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று தனது திருமணம் பற்றி அறிவித்துள்ளார்.