பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (78) சென்னையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவால் அடுத்தடுத்து திரைத்துறையினர் பலியாகி வரும் நிலையில் தற்போது பழம்பெரும் நடிகரான கல்தூண் திலக் உயிரிழந்துள்ளார். 1943-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்த இவர், சினிமா மீது கொண்ட ஈர்ப்பால் நடிகர் மேஜர் சுந்தர் ராஜன் நாடகக்குழுவில் சேர்ந்து நடித்து வந்த இவர் பின்னர் மேஜர் சுந்தர் ராஜன் இயக்கிய திரைப்படத்தில் நடித்தார்.
ஆம், 1981-ஆம் ஆண்டு மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயன் நடிப்பில் வெளியான கல்தூண் படத்தில் சிவாஜிக்கு மகனாக நடித்ததால் திலக் ‘கல்தூண்’ திலக் என அழைக்கப்பட்டார். எனினும் இந்த படத்துக்கு முன்னரே பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வேலை கிடைச்சிருச்சு, வெள்ளிக்கிழமை விரதம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர், 70 படங்களுக்கும் மேல் நடித்திவிட்டார்.
தவிர, சீரியல்களிலும் நடித்த இவர், ஏவிஎம் ஸ்டுடியோவில் சில ஆண்டுகள் உதவி எடிட்டராகவும் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த இவர், இன்று கொரோனா தொற்று தொடர்பால் காலமானார்.