சின்னத்திரை ரியாலிட்டி ஷோ வின்னரும், மாடல் அழகியுமான மெபினா மைக்கேல் மரணம் அடைந்துள்ளார். கன்னட தொலைக்காட்சியில் வெளியான 'Pyaate Hudugir Halli Life' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசு வென்றவர் மெபினா மைக்கேல். இவருக்கு வயது 22.

இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரான கூர்க் அருகேயுள்ள மடிக்கேரி என்ற பகுதிக்கு காரில் தோழிகளுடன் பயணப்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக வளைவில் எதிரே வந்த டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மெபினா மரணம் அடைய, அவரது தோழிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏராளமான ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Mebina Micheal, Accident, Death