யோகி B -யா இது? CLUBHOUSE-ல் சர்ப்ரைஸ் எண்ட்ரி! வாயடைத்து போன FANS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இசைக்கலைஞர் யோகி B, அவ்வபோது Clubhouse-ல் வந்து உரையாடுவதாக இணையத்தில் தகவல்கள் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்கள் வைரலாகி வருகின்றன.

பிரபல தனியிசை பாடல்களுடன் பொல்லாதவன், ஆடுகளம், குருவி, எந்திரன், காலா, தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ராப் பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர் பிரபல தனியிசைக் கலைஞர் யோகி B. இவர் தற்போது Clubhouse-ல் வந்து இசை பற்றியும் தனியிசை பற்றியும் ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் அவ்வப்போது உரையாடி வருகிறார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக உலகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதுடன் அனைவருக்குமே மிகப்பெரிய மன சோர்வை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். இப்படியான மன சோர்வை போக்கிக் கொள்ளவும், தொடர்ந்து தங்களுடைய வேலை நிமித்தமாக தொடர்பிலிருந்து கொள்ளவும் பலரும் இணையதளத்தை நாடுகின்றனர்.

இதற்கு முன்பு வரை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என இருந்த மக்கள் தற்போது ட்விட்டர் ஸ்பேஸ், க்ளப் ஹவுஸ் உள்ளிட்ட புதுவரவு தொழில்நுட்பங்களை நாடுகின்றனர். முன்னதாக ஜூம் இணையதளத்தில் வீடியோ கருத்தரங்கில் பலரும் இணைந்து அலுவலக மற்றும் சொந்த செயல்பாடுகளை செய்துவந்தனர். இந்த நிலையில் பிரபலங்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் என பலரும் தற்போது TwitterSpace , Clubhouse உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களுக்கு வந்து ஆடியோ சாட் செய்து கொள்கின்றனர்.

பாட்டு பாடுவது, தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை பேசுவது, விவாதிப்பது என பலவிதமாக இந்த சாட் ரூம்களில் பேசிக்கொள்கின்றனர். யார் வேண்டுமானாலும் எந்த அறைகளுக்குள்ளும் செல்ல முடியும் என்கிற மாதிரியான அமைப்பும், சிலர் க்ளோஸ் ரூம்களில் பேசிக் கொள்வது மாதிரியான அமைப்பும் இதில் உண்டு. அப்படித்தான் பலரும் தனியிசைக் கலை பற்றியும் அதில் வளர்வது பற்றியும் பேசிக் கொண்டிருந்தபோது கடந்த வாரம் பிரபல இசையமைப்பாளர்கள் Clubhouse-க்குள்ளே வந்தது பரபரப்பானது.

இதேபோல் தற்போது மலேசிய இசைக் கலைஞர்களின் Clubhouse  குழு ஒன்றில் தனியிசை மற்றும் இசைக்கலைஞர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது பிரபல இசைக் கலைஞரான யோகி B திடீர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து அசத்தியிருக்கிறார். மேலும் தமிழ் நாட்டில் மார்கழி சமயத்தில் மார்கழி மகா உற்சவம் நடத்துவது போல மலேசியாவிலும் நிகழ்வுகளை நடத்தி, இசைக்கலைஞர்கள் மக்களுடன் தொடர்பில் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்று அவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்.

ALSO READ: "நாங்க Relationship-ல இல்ல, Morphed Videos-அ நம்பாதீங்க..." - அஸ்வின், சிவாங்கி விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Popular rap singer Yogi B Surprise entry clubhouse

People looking for online information on Clubhouse, Trending, Twitterspace, Yogi B will find this news story useful.