சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.
இப்போது, பிரபல தயாரிப்பு நிறுவனம், KJR ஸ்டுடியோஸ் தங்கள் டிவிட்டர் எடுத்து ஒரு குறிப்பு பகிர்ந்து, "அனைத்து அம்சங்களிலும் பறக்கிறது! சூர்யா கோபமான இளைஞனாக, தொழில் முனைவராக, உணர்ச்சிவசமான கணவனாக என எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். .அபர்ணா பாலமுரளி அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் பிஜிஎம் படம் முழுக்க அற்புதமான டிராமா, தாக்கத்தை சேர்க்கிறது. ஊர்வசி பிரில்லியன்டாக நடித்திருக்கிறார். இது சூரரை போற்று அல்ல. இது சூர்யாவை பொட்டு! அவர் மாராவாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த ஆண்டு, தேசிய விருது உங்களுக்கு சொந்தமானது சூர்யா! இல்லையென்றால், நான் அதற்காக போராடுவேன்!" என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.