''உங்கள் நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வந்திருக்கிறதா ?'' - பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''யாருக்காவது உங்கள் நம்பரில் இருந்தே உங்களுக்கு மிஸ்டு கால் வந்திருக்கிறதா? நண்பர்கள் உங்களை அழைத்து உங்களிடம் இருந்து மிஸ்டு கால் வந்ததாக சொன்னார்களா?

எனக்கு தெரிந்தி சில பேருக்கு இப்படி நடந்திருக்கிறது. நெட்வொர் பிரச்சனையோ அல்லது ஏதாவது ஏமாற்று வேலையோ?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரசிகர்கள் சிலரும் தங்களுக்கு அந்த பிரச்சனை இருந்ததாக கமெண்ட் செய்திருந்தனர்.

கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்கவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த படம் முதலில் அடுத்த வருடம் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சனைகளால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

Tags : SR Prabhu

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular producer SR Prabhu shares shocking incident goes viral | அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

People looking for online information on SR Prabhu will find this news story useful.