விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது. இந்நிலையில் அந்த தொடரில் அவரும் மற்றோரு நடிகருக்கு மிகபெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட்க்கு தளபதி விஜய் வீட்டில் இருந்து சர்ப்ரைஸ் கால் ஒன்று வந்துள்ளது. விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏசி அவரை அழைத்து பேசியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.ஏ.சி என்னை போனில் அழைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக ஒரு நாய்க்குட்டி போல நான் துள்ளி குதித்தேன். ஷோபா மேடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மிகப்பெரிய ரசிகர் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும். அவர் புதிய படத்திற்கு ஏற்ற நடிகரை தேடி வந்த நிலையில். ஷோபா மேடம் என்னை பரிந்துரை செய்துள்ளார். மேலும் இந்த மகிழ்ச்சியை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. எனினும் இந்த கொரோனா காரணமாக இந்த படம் சற்று தள்ளிப் போகிறது. சீக்கிரமே தளபதி விஜயையும் சந்திக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.