பிக்பாஸில் கடந்த வாரம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வார்த்தைகள் வாக்குவாதத்திலும் முடிந்தது. சிலர் அனிதா சம்பத்திற்கும், சிலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவருடன் பணியாற்றிய செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ரஞ்சித், அனிதா சம்பத் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் " அனிதா சொன்னது அத்தனையும் எனக்கு தெரிஞ்சி உண்மை... அவர் முதன் முதலில் செய்தி வாசிக்க கத்துக்கிட்டது பாலிமரில. நாங்க அப்போ அடிக்காத லூட்டியே இல்ல. மேக் அப் ரூம தாண்டி சிரிப்பு சத்தம் வெளிய கேட்டு நெறைய பேரு ஓடி வந்து பாப்பாங்க. அப்போ அவ பட்ட கஷ்டத்த என் கிட்ட நெறைய தடவ சொல்லி இருக்குறா. எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியா இருக்காளோ அவ்வளவு ஷார்ட் டெம்பர்" என்று கூறியுள்ளார்.