பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' திரைப்படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து 'பீட்சா', 'சூது கவ்வும்', 'குக்கூ' என முற்றிலும் வித்தியாசமான பாணி இசையினால் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, கபாலி, தளபதி விஜய்யின் பைரவா, தனுஷின் கொடி என அவரது இசையில் வெளியாகும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது அவர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்துள்ள அவர், திருமண நாள் வாழ்த்துகள் அம்மா அப்பா. சுட்டித்தனமான பையனாக இருப்பதற்கு என்னை மன்னிச்சுக்கோங்க என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Santhosh Narayanan