ஆஸ்கார் விருதுக்கு தேர்வான அந்த சூப்பர் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்கார் விருதுகளுக்கு இந்திய திரைப்படங்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

திரைப்பட துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது அகாடமி அவார்ட் எனப்படும் ஆஸ்கார் விருதுகள். இதில் இந்திய திரைப்படங்களும் தொடர்ந்து ஃபிலிம் ஃபெடரேஷனால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. 89-வது ஆஸ்கார் விருதுகளுக்கு வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் தேர்வு செய்யப்பட்டது. 

இந்நிலையில் தற்போது 91-வது ஆஸ்கார் விருதுகளுக்கு இந்திய திரைப்படங்களின் சார்பில், மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசாரி இயக்கினார். இத்திரைப்படத்தின் உருவாக்கத்திற்காகவும் கதைக்களத்திற்காகவும் பாராட்டுப்பட்டது. 

இதை தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 

 

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான திரைப்படம் | popular malayalam film selected for oscar award

People looking for online information on Jallikattu, Lijo Jose Pellissery, Oscar awards will find this news story useful.