பிரபல மலையாள நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த சுபி சுரேஷ், திடீரென உயிரிழந்தது மலையாள திரை உலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | FARZI -ல் விஜய் சேதுபதிக்கு டப்பிங் பேசிய TSK.. நேரில் அழைத்து VJS தந்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சியான பதிவு
மலையாளத்தில் பிரபல காமெடி நிகழ்ச்சிகளில் தோன்றி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் சுபி சுரேஷ். நடனம் மற்றும் ஸ்டேஜ் காமெடி ஷோக்களில் தன்னுடைய தனித்திறன் மூலம் சிறப்பாக விளங்கி வந்த சுபி சுரேஷ், ஏஷியாநெட் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார்.
இதன் காரணமாக, மலையாள மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருந்த சுபி சுரேஷ், சூர்யா டிவியில் குழந்தைகளை வைத்து நடத்திய குட்டி பட்டாளம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருந்தார். இதில் குழந்தைகள் போலவே மாறி அவருக்கு ஈடாக மழலை போல சுபி சுரேஷ் பேசி இருந்ததும் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
டிவி நிகழ்ச்சிகளை தாண்டி திரைப்படங்களில் நடித்துள்ள சுபி சுரேஷ், கிரிஹானதான், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், காரியஸ்தன் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் தோன்றி உள்ளார்.
இந்த நிலையில், சமீப காலமாக கல்லீரல் தொடர்பான நோயால் சுபி சுரேஷ் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners.
கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபி சுரேஷிற்கு கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்படி ஒரு சூழலில், தற்போது அவர் மரணம் அடைந்துள்ளார். மலையாள மக்கள் மத்தியில் மிக பிரபலமாக விளங்கிய சுபி சுரேஷ் மறைவு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read | DADA பாத்துட்டு போன் பண்ணிய தனுஷ்.. கவின் பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்..!!