"எல்லாருக்கும் சிறந்த ரோல் மாடல் அவரு".. தோனியை சந்தித்த பிரபல தென் இந்திய நடிகர்.. வைரல் PIC!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என பல கோப்பைகளை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தது.

Popular malayalam actor meet ms dhoni pic gone viral
Advertising
>
Advertising

Also Read | "அதுக்கு எல்லாம் பயப்படுற ஆளு நான் இல்ல".. அசிம் சொன்னதும் விக்ரமன் கொடுத்த பதிலடி!

இந்திய அணியின் ரூட்டையே மாற்றி அமைத்த தோனி, சர்வதேச போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வினை ஏற்கனவே அறிவித்து விட்டார். தொடர்ந்து, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் கிரிக்கெட் ஆடி வருகிறார் தோனி. மேலும் அவரது தலைமையில், இதுவரை சென்னை அணி 4 முறை ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி அசத்தி உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தோனியை காண முடியும் என்பதால் ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்பு வரும் போதே அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள். இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தோனியை சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டோவினோ தாமஸ். பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ நடித்திருந்த மின்னல் முரளி என்ற மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படம், இந்திய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த மாரி 2 திரைப்படத்திலும் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வாஷி, தள்ளுமால உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. இது தவிர இன்னும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் தோனியை சந்தித்துள்ளார் டோவினோ தாமஸ். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த டோவினோ, "கேப்டன் கூலுடன் நேரத்தை பகிர்ந்து கொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது. திரையில் பார்ப்பது போல நேரிலும் அவரை பார்ப்பது கூல் மற்றும் தன்னடக்கமுள்ள மனிதரும் தான். நாங்கள் சிறப்பான உரையாடல்களையும் மேற்கொண்டோம். அவரை சந்தித்து பேசியதை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அனைவருக்கும் அவர் ஒரு சிறந்த ரோல் மாடல். உங்களின் சிறப்பான பயணம் மேலும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்" என நெகிழ்ச்சியுடன் டோவினோ தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | "விக்ரமன புடிக்காதுன்னு சொன்னதே இல்ல".. சீரியஸா அசிம் பேசுன நேரத்தில் அமுதவாணன் செஞ்ச விஷயம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular malayalam actor meet ms dhoni pic gone viral

People looking for online information on Malayalam Actor, Malayalam actor meet ms dhoni, MS dhoni will find this news story useful.