உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல பிரபலங்களும் எளிமையான முறையில் திருமணம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹிந்தி நடிகை சோனாலி குல்கர்னி தற்போது குணால் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறாராம். இவர் எண்ணற்ற மராத்தி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்கிறார். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் நடந்திருக்கிறது. இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த விஷயத்தை அவர் தனது பிறந்தநாள் அன்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.