அதிரடியாக ரீமேக் ஆகிறது அய்யப்பனும் கோஷியும்... தமிழில் நடிக்கப்போகும் பிரபல ஹீரோக்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. வித்தியாசமான கதைகளை கொண்ட மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. அப்படி சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் 'அய்யப்பனும் கோஷியும்'. இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

Advertising
Advertising

இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த பிளாக்பஸ்டர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்திற்காக நடிகர் சசிகுமாரிடம் பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்றும், மற்றொரு ரோலுக்காக நடிகர் ஆர்யாவிடம் பேசிவருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அய்யப்பனும் கோஷியும் ரீமேக் தமிழில் நடிக்கும் பிரபல ஹீரோக்கள் Popular Heros might act in the remake of Ayyappanum Koshiyum

People looking for online information on Arya, Ayyappanum Koshiyum, Sasikumar will find this news story useful.