இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த 'தாமிரபரணி' படம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பானு. தொடர்ந்து 'அழகர் மலை', 'பொன்னர் சங்கர்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ரிங்கு டோமி என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் தனது 5 ஆம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு பானு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவரை முத்தமிட்ட படி இருக்கும் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.