பிரபல ஹீரோவுக்கு நாளை கல்யாணம் ! - வீட்டிலேயே எளிமையாக நடைபெறவிருக்கிறதாம் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் 3 ஆம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருமணம் போன்ற நிகழ்வுகள் குறைவான நபர்களை கொண்டே செயல்படுத்த வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருமண நிகழ்வுகள் வீடுகள் மற்றும் கோவில்கள் மிகவும் எளிமையாக நடைபெற்று வருகின்றன.

பிரபலங்கள் கூட எளிமையாகவே திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு ஹீரோ நிகில் சித்தார்த்தாவிற்கும், டாக்டர் பல்லவி வர்மாவிற்கும் கடந்த பிப்ரவரி 1ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து இருவருக்கும் திருமணம் ஏப்ரலில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இருவரது திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இருவருக்கும் நாளை ( 14/05/2020 ) நிகில் சித்தார்த்தாவின் வீட்டிலேயே திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. திருமணத்தில் குடும்பத்தினர் உட்பட நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் கலந்து கொள்ள இந்த திருமணம் முறையான அனுமதி பெற்று நடைபெறவிருக்கிறதாம்.  ஊரடங்கு முடிந்த பிறகு மிகவும் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் நிகில் 'ஹேப்பி டேஸ்' திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்த திரைப்படம் 'இனிது இனிது' என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 'நிகில்', 'சுவாமி  ரா ரா', 'கார்த்திகேயா' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Popular hero Nikhil Siddhartha to get married to Pallavi Varma on tomorrow | பிரபல ஹீரோ நிகில் சித்தார்த்தா, பல்லவி வர்மாவை நாளை திருமணம் செ

People looking for online information on Marriage, Nikhil Siddharth, Pallavi Varma will find this news story useful.