பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த முறை நாமினேஷன் வேறு மாதிரி நடந்திருக்கிறது.
ஆம், இந்த முறை நாமினேஷன் என்கிற பெயரில் போட்டியாளர்கள் தங்களுக்கு தோன்றக்கூடிய சக போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட அடைமொழியையும், திரைப்பட கேரக்டர்களின் பிரபலமான வசனங்களையும், அவர்களின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பலரும் பல வகையான விருதுகளை பெற்றனர். அந்த வகையில் ராஜூவுக்கு கிடைத்த விருதுகள் இன்னும் வேற லெவலில் இருந்தன. இந்த விருதுகளை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட ராஜூ, அதே சமயம், சரியான கவுண்டரையும் அடித்து பதில் கொடுத்துள்ளார்.
அதன்படி ராஜூவுக்கு, “இங்க இவ்வளவு பிரச்சனை நடக்குது யாருடா இவன் இங்க உட்கார்ந்து மிச்சர் சாப்பிட்டுகிட்டு இருக்கான்?” என்கிற விருதை ஐக்கி கொடுத்தார். இதேபோல் டம்மி பீஸ் என்கிற விருதை அபினய், ராஜூவுக்கு கொடுத்தார். அதன் பிறகு வந்த இசைவாணி, “நீ புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணிதான்!” என்கிற விருதினை ராஜூவுக்கு வழங்கினார்.
இந்த குட்டி விருது விழாவை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த ராஜூவுக்கு அடுத்தடுத்து தனக்கு வந்தது எல்லாம் மிக்சர் சாப்பிடும் டம்மி பீஸ், தேவையில்லாத ஆணி போன்ற விருதுகள் என்பதால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் கூட, அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, “இனி தேவையான அணிகள் புடுங்கப்படும்” என்றும் “சண்டை போடும் போது, தான் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை குறிப்பிட்டு விருது கொடுக்கப்பட்டதால், சண்டை சுவாரஸ்யமாக இல்லை என்றால் மிக்சர் தான் சாப்பிட வேண்டும்!” என்று தன் ஸ்டைலில் பதிலளித்தார்.
எனினும் இந்த விருதுகளை சந்தோஷமாக ஏற்றார் ராஜூ ஜெயமோகன். விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமான ராஜூ, விஜய் டிவி நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்தார். தற்போது பிக்பாஸ் வீட்டில் என்டர்டெய்னராகவும் திகழ்கிறார். சிறந்த என்டர்டெய்னராக திகழும் தனக்கு இப்படியான விருதுகளும் இன்னொரு பிரேக் கொடுப்பதாகவும் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.