விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் 78 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் கிராண்ட் ஃபினாலே ரேஸை நோக்கி விளையாண்டு கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவுக்காரர்கள் ஒவ்வொருவராக வருதை தந்துகொண்டிருக்கின்றனர். முன்னதாக அக்ஷராவின் அண்ணன் மற்றும் அம்மா வருகை தந்தபோது, அக்ஷரா தன் அண்ணன் மற்றும் அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிட்டார்.
இதேபோல் சிபி, நிரூப் என ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்தக் காரர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். ராஜூவின் மனைவியும், அம்மாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்ததையும் காண முடிந்தது. இதில் அக்ஷராவின் அண்ணன், நிரூப்பின் தந்தை உள்ளிட்டோர் அவரவர்களின் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி வெளியில் இருந்து பார்க்கும் தங்களுடைய பார்வையையும், மக்களுடைய பார்வையையும் பகிர்ந்துவிட்டு சென்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு யாஷிகா ஆனந்த் வருகை தந்திருக்கிறார். நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் முக்கியமான போட்டியாளரான நிரூப் நந்தகுமாரின் முன்னாள் காதலி ஆவார். அவர் தான் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தார்.
வந்தவர், ஒரு கண்ணாடி பாக்ஸ்க்குள் நின்றபடி, நிரூப் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸிட்டையே பேசுகிறார். யாஷிகாவின் உடல்நிலை கருதி, அவர் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிடையே இவ்வாறு பேசவைக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த், ஈ.சி.ஆர் சாலை விபத்தில் தன் தோழியை இழந்ததுடன், தானும் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். தற்போது குணமாகி வரும் யாஷிகா ஆனந்த் அண்மையில், சாலை விபத்து நடந்த ஈ.சி.ஆர் பகுதிக்கு, பிஹைண்ட்வுட்ஸ் ஊடகக் குழுவினருடன் சென்று தம்மை காப்பாற்றியவர்களை சந்தித்து நன்றி சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.