இந்திய திரையுலகில் சமீபகாலமாகவே பல துக்க செய்திகளைக் கேள்விப்பட்டு வருகிறோம். அடுத்தடுத்து மரணித்து வரும் கலைஞர்களின் மரணங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி ஒரு செய்திதான் இது.
பிரபல இயக்குனரும், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவான பிருந்தா சாரதி அவர்களின் தந்தையார் சுப. நாராயணன் தற்போது மரணமடைந்துள்ளார். அவருக்கு அவருக்கு வயது 86. தித்திக்குதே படத்தை இயக்கிய பிருந்தா சாரதி, ஆனந்தம், பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவரது தந்தை தற்போது மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு இயக்குனர் லிங்குசாமி உட்பட திரைத்துறை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Brindha Sarathy, Father, Death