'பிரபல' ரஜினி .. கமல் படங்களின் இயக்குநருக்கு கொரோனா.. மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரான எஸ்.பி.முத்துராமன் தற்போது மெட்வே மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுதிக்கப்பட்டார்.

அவருக்கு பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மருத்துவக் குழு மற்றும் மெட்வே மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular director SP Muthuraman test covid19 positive hospitalised

People looking for online information on SP Muthuraman will find this news story useful.