ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மரணம் - அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுநீரக பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இயக்குநர் நிஷிகாந்த் காமத் சிகிச்சை பலனின்றி இன்று (17/08/2020) மாலை சரியாக 4.30 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 50.

முன்னதாக இன்று காலை அவர் மரணம் குறித்து வதந்திகள் பரவிய நிலையில், அவர் இன்னும் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக பிரபலங்கள் தகவல் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை நிர்வாகமே அவர் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

பாலிவுட்டில் 'த்ரிஷ்யம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் நிஷிகண்ட் காமட். தமிழில் மாதவன் ஹீரோவாக நடித்த 'எவனோ ஒருவன்' படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களுக்கும் பரீட்சையமாகியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், நிஷிகண்ட் ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

Popular director Nishikant Kamat passes away at 50 | மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மரணம்

People looking for online information on Nishikant Kamat will find this news story useful.