நடிகர் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த படம் 'ரெமோ'. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார். முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரபலங்களை ஒன்று சேர்த்து அந்த படத்தை முடித்து காட்டினார்.
எனவே இதனை அடுத்து தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. எனவே முக்கியமான இந்த படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் ஆஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வெளியான அவரது திருமண வரவேற்பு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.