அப்பாவான சூப்பர் ஹிட் பட இயக்குநர் - பிறந்தநாள் பரிசு என ரசிகர்கள் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னடத்தில் 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி', 'ராஜ்குமாரா' உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ் ஆனந்திரம். இவர் தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் 'யுவரத்னா' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சயீஷா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு நேற்று (18/08/2020) ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்வதாகவும் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். சரியாக இரண்டு நாட்களுக்கு பிறகு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை அவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Popular director blessed with baby boy ft Santhosh Ananddram | ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல இயக்குநர், ரசிகர்கள் வாழ்த்து

People looking for online information on Santhosh Ananddram will find this news story useful.