பிரபல இயக்குநரும் எழுத்தாளருமான ஈரோடு சௌந்தர் இயற்கை எய்தினார் என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கே.எஸ்.ரவிகுமார். இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நாட்டாமை. இத்திரைப்படத்திற்கு கதை திரைக்கதை உள்ளிட்டவற்றை எழுதியவர் ஈரோடு சௌந்தர். மேலும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்திலும் இவர் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் நேற்று உடல்நல குறைவால் காலமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 63 வயதான அவர் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஈரோடு சௌந்தரின் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Erode Sounder, Simmarasi