விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு நிஜத்திலும் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே அவரது காட்சிகளுக்கு பதிலாக தற்போது புதிய காட்சிகள் வைக்க வேண்டிய சூழ்நிலையில் நிகழ்ச்சி குழு இருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை பகிர்ந்து உள்ளனர். ஆம் சமீபத்தில் அழகிய ஆண் குழந்தையை பெற்றேடுத்த இருவரும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைய உள்ளனர். ஏற்கனவே 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் பிரபலமடைந்த அவர் தொடர்ந்து 'கலக்கப் போவது யாரு', அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கிருவர் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.