''ரஜினி சார் மாதிரி, தளபதி விஜய்யும்.... சமீபத்தில் ஒரு படத்துக்காக...'' - சந்தோஷ் சிவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது தனித்துவமான ஒளிப்பதிவால் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். அவரது ஒளிப்பதிவில் வெளியாகும் படங்களுக்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் 'தளபதி', 'தர்பார்', தளபதி விஜய் நடித்துள்ள 'துப்பாக்கி', சூர்யாவின் 'அஞ்சான்' உள்ளிட்ட படங்கள் அவரது திறமைக்கு ஒரு சான்று. இந்தியாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகக் கருதப்படும் சந்தோஷ் சிவன் படங்களையும் இயக்கியுள்ளார்.

ஷாருக்கான் தல அஜித் இணைந்து நடித்த 'அசோகா' உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் ராஜீவ் மேனன் இணைந்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர். அப்போது தளபதி விஜய் குறித்து பேசிய அவர், ரஜினி சார் போல, விஜய்யும் தனது பணியை நேசிக்கக் கூடியவர். மிகவும் ஒழுக்கமானவர்.

சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவார். அவரை சந்திக்கும் போது அவர் எவ்வளவு சுவாரஸியமான மனிதர் என்பது தெரியவரும். யோகி பாபு படத்துக்காக சந்திக்கும் அட்லி பட செட்டில் விஜய் சாரை சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எப்பவும் போல உற்சாகமானவராக இருந்தார்.

''ரஜினி சார் மாதிரி, தளபதி விஜய்யும்.... சமீபத்தில் ஒரு படத்துக்காக...'' - சந்தோஷ் சிவன் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular Cinematographer Santhosh Sivan speaks about Rajinikanth and Thalapathy Vijay | ரஜினிகாந்த் , விஜய் குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கர�

People looking for online information on Rajinikanth, Santhosh Sivan, Thalapathy Vijay, Vijay will find this news story useful.