உலகம் முழுவதும் கொரனா நோய் பரவி வருகிறது. அவ்வப்போது அதிகரித்து வரும் துக்கம் செய்திகளின் இடையில் சில நல்ல செய்திகளும் வெளிவருகிறது. அந்த வகையில் ஹிந்தி சினிமாவில்பிரபல நடிகராக இருப்பவர் சுமீத் வியாஸ். இவர் நடிகை ஸ்ரீதேவியுடன் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி நடிகை ஏக்தா கவுல் என்பவரை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள். இந்நிலையில் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர். இது பற்றி சுமீத் கூறும் பொழுது "எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வேத் என பெயரிடலாம் என்று இருக்கிறோம். எனது அம்மாவும் அப்பாவும் குழந்தையிடம் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்கின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் குழந்தையிடம் கொஞ்சி மகிழ்கின்றனர்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.