"நண்பர் நட்டி, இயக்குனர் செல்வராகவனுக்கு".. பகாசூரன் படத்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ருத்ர தாண்டவம் திரைப்படத்தை தொடர்ந்து மோகன்.G இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "3 முறை போன் பண்ணார். எடுக்க முடியல..." மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து ரஜினி உருக்கமான பேட்டி

இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பகாசூரன் திரைப்படம், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

பகாசூரன் திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் சூழலில், ஏராளமான சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரும் பகாசூரன் படத்தை பற்றி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பாக அனுராக் காஷ்யப் பகிர்ந்த ட்வீட்டில், "பகாசூரன் படத்திற்கு தென் இந்தியாவில் சிறந்த விமர்சனங்கள் வருகிறது. நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது ட்வீட்டில், செல்வராகவன் பற்றி குறிப்பிட்டிருந்த நடிகர் கார்த்தி, "செல்வராகவன் முழு நேர நடிகராக இருப்பதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

எங்களை போல ஒரு சிலருக்கு மட்டுமே அவர் ஒரு சிறந்த நடிகர் என்று தெரியும், ஆனால் இப்போது உலகமே சாட்சியாக உள்ளது. பகாசூரன் டீமுக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுளளார்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து நடிகர் ஜீவா தனது ட்வீட்டில், "பகாசூரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதை அறிவதில் மகிழ்ச்சி" என குறிப்பிட்டு, செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்ள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்வீட்டில், "பகாசூரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது" என குறிப்பிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Also Read | "மகா சிவராத்திரி".. ஈஷா யோகா மையத்தில் தமன்னா.. பரவச நடனம் ஆடிய நடிகை.. வீடியோ!!

தொடர்புடைய இணைப்புகள்

Popular bollywood director congrats bakasuran movie

People looking for online information on Bakasuran, Selvaraghavan will find this news story useful.