“ரொமான்ஸ்ல பின்றார்ப்பா!”.. தன் பிறந்தநாளில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆறாம் ஆண்டு திருமண நாளில் தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக் பாஸ் 4வது சீசன் டைட்டில் வின்னர் நடிகரான ஆரி அர்ஜூனன்.

popular biggbosstamil title winner surprise wife viral video
Advertising
>
Advertising

மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில்  மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி அர்ஜூனன். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரி அர்ஜூனன் மற்றும் நதியா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. நதியாதான், ஆரியிடம் தனது காதலை முதலில் வெளிப்படுத்தி இருந்தார்.

popular biggbosstamil title winner surprise wife viral video

இதனிடையே ஆரியின் மனைவி நதியா, நடிகர் ஆரி அர்ஜூனனிடம், “படங்களிலோ அல்லது சோஷியல் மீடியாக்களில் யாரேனும் காதலை வெளிப்படுத்துவது போல காட்சியைப் பார்த்தால் நீங்கள் ஒரு முறையாவது எனக்கு எப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும்” என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.

அதனை நிறைவேற்றும் பொருட்டு, நடிகர் ஆரி, தமது இந்த ஆறாம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு நதியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரை வெளியில் அழைத்துச் செல்வது போல் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர் தனது காதலுக்காக தன் பெற்றோரையும், தன் நாட்டையும் விட்டு வந்து அவருடன் துணையாக வாழும் அவரது மனைவிக்கு, “என் வாழ்க்கையை  அர்த்தமுள்ள தாக்கியவள் நீதான்” என்று கூறி மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத நதியா அங்கேயே ஆனந்த கண்ணீர் விட்டார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகர் ஆரி, “காதலுக்காக தன் சொந்த நாட்டையும் விட்டு பெற்றோர்களையும் உறவினர்களையும் விட்டு விட்டு எனக்காகவே வாழும் என் மனைவிக்கு அவரது ஆசையை நிறைவேற்ற இப்படி இன்ப அதிர்ச்சி கொடுத்தேன், அதற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் ஈரோடு மகேஷ் ,  Dr.அகமது மற்றும் வெங்கி குடும்பத்தினருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

Popular biggbosstamil title winner surprise wife viral video

People looking for online information on Aari, Biggboss, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5 will find this news story useful.