ஹாலிவுட்டிற்குள் தடம் பதிக்கும் பிரபல தமிழ் இயக்குனர்... வேற லெவல் சர்ப்ரைஸ் நியூஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹாலிவுட் தரத்திற்கு தமிழ்ச் சினிமாவை எடுத்திருக்கிறார்கள் என்பது மாறி இப்போது ஹாலிவுட்டிலேயே தமிழர்கள் படம் எடுக்கிறார்கள். 'வல்லதேசம்' என்ற வித்யாசமான தமிழ்ப்படத்தை இயக்கிய N.T.நந்தா, இன்று '120 Hours' என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லரை வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா..'மிரட்டியிருக்கிறாய்' என்று நந்தாவை வாழ்த்தி இருக்கிறார். 

ஒளிப்பதிவில் புதுமையையும், திரைக்கதையில் வேறொரு வடிவத்தையும் கொண்டு உருவாகியுள்ள, இந்த 120 hours நிச்சயம் ஹாலிவுட்டில் பேசப்படும் என்கிறார், இயக்குநர். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில்  நடித்துள்ள பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார். உடன் பிரணய் காளியப்பன் என்ற நடிகரையும் இயக்குநர் N ,T, நந்தா அறிமுகப்படுத்தியுள்ளார். கோலிவுட் இயக்குநர்களின் கனவுக் கோட்டையான ஹாலிவுட்டிற்கு போன இயக்குநர் N.T.நந்தாவை கோடம்பாக்கம் இப்போது உற்றுக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஹாலிவுட்டிற்குள் தடம் பதிக்கும் பிரபல தமிழ் இயக்குனர்... வேற லெவல் சர்ப்ரைஸ் நியூஸ்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Popular biggboss contestant to enter into hollywood

People looking for online information on 120 hours, Sakshi Agarwal will find this news story useful.