பாய்ஸ் கேங்கில் இருந்து அடுத்த ஹீரோ ரெடி... வெளியான பர்ஸ்ட் லுக்.. குஷியான ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில்  இறுதி கட்டத்தில் போட்டியாளர்கள் தங்களை  நிரூபிக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பலருக்கும் பேவரைட்டாக இருப்பது கடந்த சீசன் தான். இதற்க்கு முக்கிய காரணமே பாய்ஸ் கேங்க் தான். முகேன், தர்ஷன், சாண்டி, கவின் ஆகியோர் மக்களின் பேவரைட்டாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதில் சாண்டி தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு '3:33' என்று பெயரிட்டுள்ளனர்.

புதுமுக இயக்குனரான நம்பிக்கை சந்துரு இந்த படத்தை இயக்க, பாம்பூ டிரீஸ் சார்பாக ஜீவி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக்கை பார்க்கும் பொழுது டைம் மெஷின் மீது சாண்டி அமர்ந்திருப்பது போல இருக்கிறது. மேலும் பிக்கபஸ் நடிகை ரேஷ்மா, மைம் கோபி, பிக்பாஸ் சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ருதி ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sandy

தொடர்புடைய செய்திகள்

Popular biggboss contestant to be introduced as hero ஹீரோவாகும் பிக்பாஸ் போட்டியாளர்

People looking for online information on Sandy will find this news story useful.