பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். தமிழ் சினிமாவில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தனிஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்திருப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகை நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நிஷாவின் வளைகாப்பின் போது எடுத்த புகைப்படத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் "கடந்த வருடம் இதே நேரம். ஒரு வருடம் ஆகிவிட்டது என்று என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் கனவுகள் நிஜமாகும் போதெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்றே தோன்றும்" என்று தலைப்பிட்டுள்ளார்.