உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷெரின். 2002-ம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு சில படங்களில் நடித்தவர். மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். இந்நிலையில் அவரது வேஷ்டி சட்டை புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். "எனது தாய் தனது உடைகளை தர மறுக்கிறார் எனவே தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன்" என்று வேடிக்கையாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.