உலக அளவில் கொரோனா வைரஸினால் மக்கள் துன்புறும் வேளையில் ஆங்காங்கே சில நல்ல செய்திகளும் மக்களின் மனங்களின் மனதில் நம்பிக்கை விதையை ஏற்படுத்தி வருகிறது. பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த கொரோனா வைரஸ் அவர்களின் ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த வகையில் பிரபலங்கள் பலரும் தனது உடல் எடை குறைந்ததை ஃபோட்டோவாக தங்களது சமூக வலைதளங்களில் பகிர அது வைரலாகி வருகிறது. அந்த வகையில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டு பிரபலமான நடிகையும், மாடலுமான ஷெனாஸ் கில் கடந்த 6 மாதத்தில் 12 கிலோ குறைத்துள்ளாராம்.
இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் 67 கிலோவில் இருந்து 55 கிலோவிற்கு அவர் தனது எடையை குறைத்துள்ளார். அதன் சீக்ரெட் குறித்து கேட்ட போது, சாப்பாடும் அளவை குறைத்ததாக தெரிவித்தார்.
மேலும், ''என்னை பிக்பாஸில் இருக்கும் போது உடல் எடை அதிகம் இருப்பதாக விமர்சித்தார்கள். நான் உடல் எடைகுறைக்கலாம் என முடிவு செய்தேன். உடல் எடை குறைப்பது கடினமான காரியம் இல்லை. இரண்டு ரொட்டி சாப்பிட வேண்டிய இடத்தில் ஒரு ரொட்டி சாப்பிட்டேன்'' என்றார்.