VIJAY : விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ஹீரோயின் இவர்தானா ? - பட்டையை கிளப்பும் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.  தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார். கடைசியாக நெல்சன் இயக்கிய Beast படத்தில் விஜய் திரையில் காணப்பட்டார். Beast திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Advertising
>
Advertising

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரத்னகுமாருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படமும்  வெளியானது. மேலும் சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் திரிஷா இணையவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,

நடிகை திரிஷா அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை திரிஷா விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | 5 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுடன் சந்திப்பு.. மாஸ் எண்ட்ரி கொடுத்த தளபதி விஜய்..!

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress to join as lead in vijay Thalapathy 67 deets

People looking for online information on Thalapathy 67, Vijay will find this news story useful.