கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை - கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எப்படி ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை முடக்கி போட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் திரைப்படங்களின் படப்பிடிப்புகள், வெளியீடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Popular Actress tested positive for coronavirus ft Natasha Suri | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை நடாஷா சூரி

இந்நிலையில் நடிகையும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் வேர்ல்டு இந்தியா பட்டம் வென்றவருமான நடாஷா சூரி தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து அவர் ஒரு நேர்காணலில், ''கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஒரு அவசர வேலையின் காரணமாக புனே சென்றேன். பிறகு திரும்பி வந்த போது, எனக்கு காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சோர்வு ஏற்பட்டது.

Popular Actress tested positive for coronavirus ft Natasha Suri | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை நடாஷா சூரி

மூன்று நாட்களுக்கு முன்பு டெஸ்ட் செய்த போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் தற்போது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறேன். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். என்னுடன் வசிக்கும் பாட்டி மற்றும் சகோதரி தற்போது கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிபாஷா பாசுவுடன் அவர் நடித்திருக்கும் 'டேஞ்சரஸ்' படம் ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயரில் வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து தெரிவித்த அவர், டேஞ்சரஸ் படத்தின் புரமோஷன் வரற ஆகஸ்ட் 10 முதல் துவங்கவிருந்ததாகவும் தற்போது தன்னால் கலந்து கொள்ள இயலாதது குறித்தும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Popular Actress tested positive for coronavirus ft Natasha Suri | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை நடாஷா சூரி

People looking for online information on Bipasha Basu, Covid 19, Dangerous, Natasha Suri will find this news story useful.