கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஐந்தாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் திரையுலக பிரபலங்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் சேலஞ்ச் டாஸ்க்குகள், டிக்டாக் செய்வது, டான்ஸ் வீடியோ என தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அவை வைரலாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடேலா (Urvashi Rautela) நீருக்கு பதிலாக பாலில் குளிக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஊர்வசி ரௌடேலா நடிப்பில் 'சனம் ரே' (Sanam Re), பகல்பண்டி(Pagalpanti) படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.