பாலிவுட்டில் 'மணிகர்னிகா' மற்றும் 'பாகி 3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அன்கிதா. இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 போட்டியாளரான இவர் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பரீட்சையமாகியுள்ளார்.
சமீபத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் தோழியான இவர், டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சுஷாந்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 6 வருடங்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. சுஷாந்தின் மறைவின் பொழுது அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களை கலங்க செய்தது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரட்டைக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''புதிய வாழ்க்கை துவங்கியதன் காரணமாக எங்கள் குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறத. இரட்டைக் குழந்தைகளான அபீர் மற்றும் அபீராவை வரவேற்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.