மலையாள சினிமாவில் பிரபல நடிகையான பூர்ணிமா, தனது கணவர் இந்திரஜித் சுகுமாரனுடன் ஹனிமூனில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இருவரும் சேர்ந்து 2019-ஆம் ஆண்டு வெளியான 'வைரஸ்' என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யானை சிலைக்கு முன்பு இருவரும் ரொமான்டிக்காக கைகளை பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அவர் "இது எங்கள் ஹனிமூனா, இல்லை ஸ்கூல் டூரா என்று தெரியவில்லை. ஆம் நாங்களும் ஹனிமூன் சென்றோம். ஆனால் அந்தக் காலங்களில் உங்கள் நினைவில் நிற்பவை எல்லாம், நாங்களும் சிறந்த ஹனிமூனை அனுபவித்தோம் என்று தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே கொடுக்கும் சில போஸ்கள் மட்டுமே" என்று வேடிக்கையாகக் கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தின் மூலம் அந்த காலத்தில் தம்பதியர்கள் ஹனிமூன் என்ற பெயரில் செய்த வேடிக்கையான விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் 'நாங்களும் இப்படித்தான் ஹனிமூன் சென்றோம்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.