என்ன ஒரு சிரிப்பு ? - தனது சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'நேரம்', 'ராஜா ராணி', 'நய்யாண்டி', 'வாயை மூடி பேசவும்', 'திருமணம் எனும் நிக்காஹ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நஸ்ரியாவிற்கு இங்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு தனது அழகாலும், துறுதுறு நடிப்பாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

Advertising
Advertising

மேலும் பிரபல நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பின் நடிக்காமல் இருந்தவர் பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'கூடே', 'டிரான்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் சிறுவயதில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.  தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Popular Actress shares her Childhood pic on instagram goes Viral | தனது குழந்தைப்பருவ போட்டோ பகிர்ந்த பிரபல நடிகை

People looking for online information on Fahad Fazil, Nazriya nazim will find this news story useful.