''நானும் தற்கொலை செய்ய நினைத்தேன்... '' - சுஷாந்த் மரணம் குறித்து பிரபல நடிகை உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த்  சிங் ராஜ்புட் மரணச் செய்தி நாடு முழுவதும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டனர்.

மேலும் எந்தவொரு பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது என்று கருத்து தெரிவித்துகின்றனர். தற்போது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகளையும் எழுதி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை சோம்யா சேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்த் சிங் குறித்து நீண்ட பதிவை எழுதியுள்ளார்.  அதில் ''தற்கொலை - மிகக் கடினமான வார்த்தை. நீங்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டால், உங்கள் நண்பர்களை அழையுங்கள், அல்லது உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால் உங்கள் கண்ணாடி முன்னாள் நின்று அதில் தெரியும் மனிதரிடம் பேசுங்கள். எல்லா பிரச்சனைகளும் ஒரு நாள் சரியாகிவிடும் என சொல்லுங்கள்.

எனக்கும் தற்கொலை எண்ணம் எழுந்தது. ஆனால் செய்து கொள்ள இயலவில்லை. காரணம் நான் அப்பொழுது கர்ப்பமாக இருந்தேன். நான் மட்டும் இருந்தால் நிச்சயம் செய்திருப்பேன். எல்லோருக்கும் தற்கொலை எண்ணம் வரலாம். உங்களை நேசிப்பவர்கள், உங்களின் வார்த்தைகளை கேட்பதற்காக காத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

 

Suicide is not the solution. Seek help immediately - State health department suicide helpline number - 104; Sneha SSuicide Prevention Centre - 044-24640050.

 

தொடர்புடைய இணைப்புகள்

Popular Actress shares emotional note on mental illness after Sushant Singh Rajput's death | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பிரபல நடிகை உருக்கம்

People looking for online information on Somya Seth, Sushant Singh Rajput will find this news story useful.