'சத்தம் போடாதே!' லாக்டவுன்ல ஷூட்டிங்கா? - பிரபல நடிகை வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இதனால் மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? அல்லது மெதுவாக தளர்த்தப்படுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 27) ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநிலங்களிடையே மாறுபட்டக் கருத்துகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு பக்கம் இருக்க, கொரோனா வைரஸினால் முற்றிலும் குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால் திரையுலக பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மேலும், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சமூக வலைதளங்களில் டிக்டாக் வீடியோ, பல்வேறு சேலஞ்சுகள் செய்வது என பதிவிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகை அஹானா கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு புகைப்படம் பகிர்ந்துள்ளார். அதில், கதவு முன் ஒரு போர்டு மாட்டப்பட்டுள்ளது. அந்த போர்டில், ''ஷூட்டிங் ! தயவுசெய்து கதவை திறக்காதீர்கள். சத்தம் போடாதீர்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், வீடியோவை ஷூட் செய்யும் போது சவுண்ட் குவாலிட்டிக்காக அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இங்கு மிகவும் சத்தமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  அவரது பதிவில் அப்படி என்ன ஷூட்டிங் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular Actress shares BTS pic at coronavirus lockdown ft Ahaana Krishna | கொரோனா வைரஸ் லாக்டவுனில் ஷூட்டிங் ஃபோட்டோ பகிர்ந்த பிரபல நடிகை

People looking for online information on Ahaana Krishna, Coronavirus, Lockdown, Shooting will find this news story useful.