ஜிம் குளோஸ் பண்ணா என்ன ?!... வீட்டுக்கதவில் தொங்கிய படி வொர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நம் ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள் தங்களது உடல் நலம் குறித்து அக்கறை செலுத்தத் துவங்கியுள்ளனர்.

பிரபலங்கள் பலரும் தங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஜிம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் தங்கள் வீட்டில் இருந்தபடியே அவர்கள் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை சஞ்சனா தனது வீட்டுக்கதவில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், காலை வணக்கம், வாழ்க்கை எப்பொழுதும் நமக்கு விருப்பமானது போல் இருக்காது. ஆனால் சிறப்பான வழியில் நாம் வாழ முடியும். என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமான சஞ்சனா, கோ, அஞ்சான், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Popular Actress Sanjana shares workout video Goes viral | பிரபல நடிகையின் வித்தியாசமான உடற்பயிற்சி வீடியோ வைரல்

People looking for online information on Coronavirus lockdown, Gym, Sanjana, Sanjana Singh will find this news story useful.