கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த 'வாரணம் ஆயிரம்' படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் சமீரா ரெட்டி. அந்த படத்துக்கு பிறகு தல அஜித்துடன் 'அசல்', 'வெடி', 'வேட்டை' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் அக்ஷய் வர்தே என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.
அதில், என் மகன் ஹன்ஸியின் பிறந்தநாளை எங்களால் முடிந்த அளவிற்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவரது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.